ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Sunday,April 05 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடையும் ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நீடிக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நொய்டா தவிர உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது ஆறுதலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களால் இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவையே தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் மக்களின் நிலையில் திண்டாட்டமாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.