மே 3 வரை ஊரடங்கில் தளர்வு இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் இன்று முதல் ஒருசில துறைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழகத்திலும் விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தமிழக முதல்வர் இதுகுறித்து வல்லுனரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு சற்றுமுன் இதுகுறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மே 3 வரை ஊரடங்கில் தளர்வு இல்லை என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் என்றும், நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020ஆம் தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout