26 வயது பெண் டிவி ரிப்போர்ட்டர் சாலை விபத்தில் பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
26 வயது பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த சம்பவம் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் CBS2 என்ற தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக பணி செய்தவர் 26 வயது நினா கபூர். இவர் நேற்று மாலை 5 மணிக்கு பணி முடிந்து வாடகை இருசக்கர வாகனத்தில் வீடு சென்றுள்ளார். அந்த இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் ஓட்டிச் சென்றார்
இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நினா கபூர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இந்த பயணத்தின்போது இருவருமே ஹெல்மெட் அணியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நியூயார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ரிப்போர்ட்டர் நினா கபூரின் மரணம் CBS2 தொலைக்காட்சி ஊழியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com