LOVE பண்ணும் போது இப்படி பண்ணலாமா…?
- IndiaGlitz, [Thursday,January 09 2025]
காதலின் இலக்கு காமம் ஆனாலும், காமத்தின் இலக்கு காதலானாலும் அதன் வாழ்வு தற்காலிகமானதுதான். காமம் கடந்த காதலே நீடித்து வாழும் என்பதை படதில் காட்டமாலே பார்வையாளனுக்கு கடத்திருக்கிறார் (LLR) LOVE LUST RETRO Short Film-யின் இயக்குனர் மாஸா கோபி.
படத்தின் தொடக்கத்தில் நாயகி மேவி தனக்கான SPACE-ஐ தனது காதலன் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக வலியோடு அவனை விட்டு பிரிகிறாள். அந்த வேதனையோடு அவளின் காலங்கள் கடக்க கடக்க அவள் கண்ணீரும் கரைந்து காதலனின் நினைவும் மறைகிறது. இயல்பான வாழ்வுக்கு மெல்ல அவள் திரும்பி வெளியே வருகிறாள்.
அப்போது நாயகன் கார்த்திக் கண்ணில் படுகிறாள். அந்த நொடியிலிருந்தே அவளுக்கு தொடர்ந்து அவன் காதல் வலையும் வீசுகிறான். நான் BREAKUP ஆனவள் என்று நேர்மையாக அவனிடம் சொல்லி மேவி முற்றுப்புள்ளி வைக்க அவனோ மிகவும் சாதரணமாக நானும் BREAKUP ஆனவன் தான் என அதை எளிமையாக கடந்து ரெண்டாவது காதலுக்கான துளிர் விடுகிறான். ஏன் என்று கூட கேட்காத அவன் POSITIVE APPROACH-ல் மேவி மீண்டும் காதலில் விழுகிறாள். இந்த காதல் அவளுக்கு கற்றுக்கொடுத்த பாடமென்ன என்பதே இக் கதையின் பயணமும் முடிவும்.