எல்.கே.ஜி வெற்றியால் பயனடைய போகும் கஜா பாதித்த பகுதிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி. திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்கால அரசியல் நிகழ்வுகள், கச்சிதமான திரைக்கதை, ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் பாத்திரப்படைப்பு, கிளைமாக்ஸில் சொல்லும் கருத்துக்கள் ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணங்கள் ஆகும்.
இந்த நிலையில் நேற்று 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், இயக்குனர் பிரபு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வெற்றி விழாவுக்கு பின் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி, 'நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை விட அதிக வெற்றியை தந்த ரசிகர்களுக்கு எங்களது நன்றிகள்! இப்போது நாங்கள் உங்களுக்கு திருப்பி தர வேண்டிய நேரம் இது. கஜா புயலால் பாதித்த பகுதிகளில் உள்ள பத்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் வெற்றியால் டெல்டா பகுதியில் உள்ள பத்து பள்ளி மாணவர்கள் பயனடைய போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you for giving us more than we desired and deserved. Its time for us to give it back. Team #LKG will be celebrating the success of our film by adopting ten government schools in the Gaja affected delta region ! ❤️?? pic.twitter.com/Xswh5YHAi7
— LKG (@RJ_Balaji) February 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com