எல்.கே.ஜி வெற்றியால் இயக்குனருக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை காட்சியுடன் தொடங்கிய இந்த படத்தின் காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகி மூன்றே நாட்களில் படத்தின் பட்ஜெட்டை எடுத்துவிட்டது. தற்போது தயாரிப்பாளர் விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் இந்த படத்தால் லாபம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், இயக்குனர் பிரபு, நடிகர் ரித்தீஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி விழாவில் இயக்குனர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், விலையுயர்ந்த புதிய ஹூண்டாய் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த பரிசை எதிர்பாராத இயக்குனர் பிரபு ஆச்சரியம் அடைந்து தயாரிப்பாளருக்கும் தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.