மூன்றே நாளில் லாபத்தை பெற்ற 'எல்.கே.ஜி'

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவான 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் இந்த படத்தின் பட்ஜெட் தொகையை எடுத்துவிட்டதாகவும், இன்று முதல் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்ட சக்திவேலன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் நல்ல லாபத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1.36 கோடியும், தமிழகம் முழுவதும் சுமார் 8.5 கோடியும் வசூல் செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக வெளியான பல திரைப்படங்கள் போட்ட முதலீடை எடுக்கவே திணறிக்கொண்டிருந்த நிலையில் இந்த படம் மூன்றே நாளில் லாபத்தை நோக்கி சென்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதில் இருந்து ஒரு படம் வெற்றி அடைய ஸ்டார் வேல்யூ அல்லது பெரிய பட்ஜெட் தேவையில்லை என்பதும் கதை, உருவாகும் விதம் நன்றாக இருந்தால் சிறு பட்ஜெட் படமும் நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதும் மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.
 

More News

விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகள் எடுக்கவில்லை

ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு வரவேற்பு அளித்த தனுஷ்-அனிருத்

திரையுலக பிரபலங்கள் அனைவருமே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிரபலத்திற்கும் தற்போது வலைத்தளம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது

கமல் கட்சியில் இணைந்த பாமகவின் முக்கிய பிரமுகர்!

அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இணைந்து