லிவ்-இன் உறவில் இருந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த காதலி, திருமணம் செய்ய வலியுறுத்தியதை அடுத்து அவரை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அஃப்தப் என்பவர் டெல்லி கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். அங்கு தன்னுடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா, அஃப்தப்பை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். ஆனால் திருமணத்திற்கு அஃப்தப் சம்மதிக்கவில்லை என்பதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் ஷ்ரத்தாவை கொலை செய்த அஃப்தப், அவரை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து டெல்லியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் வீசி எறிந்து உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஷ்ரத்தாவின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஷ்ரத்தாவை அஃப்தப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி தூக்கி எறிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அஃப்தப் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். லிவ்-இன் உறவில் இருந்த காதலியை 35 துண்டுகளாக இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
एक रूह कँपाने वाले मामले में दिल्ली में एक लड़की को उसके बॉयफ्रेंड ने जान से मार दिया और उसके 35 टुकड़े कर फ्रिज में रखे! उसके शव के टुकड़ों को शहर के अलग अलग इलाक़ों में फेंका। समाज में कैसे कैसे दरिंदे पल रहे हैं। पुलिस ने आरोपी को गिरफ़्तार किया है, दरिंदे को कड़ी सजा हो। pic.twitter.com/aMppxvu8zv
— Swati Maliwal (@SwatiJaiHind) November 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments