4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி: ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருட்களின் பட்டியல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த ’வேதா எல்லாம்’ என்ற வீட்டை அரசுடமையாக்க சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்தது என்பதும் இதற்காக ரூபாய் 60 கோடியை தமிழக அரசு செலுத்தி விட்டதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்தற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருட்களின் பட்டியல் குறித்த விவரங்களும் அந்த அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதில் 4.372 கிலோ தங்கம், 601.424 ஒரு கிலோ வெள்ளி, 38 ஏசி, 556 பர்னிச்சர் பொருட்கள், 10 பிரிட்ஜ்கள் உள்பட 32,721 பொருட்களின் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்டியலில் 6514 சமையலறை பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,434 உடை வகைகள், 29 தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள், 221 கிச்சன் பொருட்கள், 251 எலக்ட்ரிக்கல் பொருள்கள், 8376 புத்தகங்கள், 653 நீதிமன்ற டாக்குமென்ட்கள், 253 ஸ்டேஷனரி பொருட்கள், 1712 பர்னிச்சர் பொருள்கள், 108 காஸ்மெட்டிக் பொருட்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout