இந்திய மருத்துவக்கழகம் அங்கீகரித்துள்ள கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியல்!!!
- IndiaGlitz, [Monday,April 13 2020]
ஆரம்பக்கட்டத்தில் கொரோனா மருத்துவப் பரிசோதனை புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஏனெனில் கொரோனா பரிசோதனையில் அதிகப்படியான பாதுகாப்பு வசதிகள் தேவைப்பட்டது. பரிசோதனை கழிவுகளை முறையாக வெளியேற்றுவது, மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுப்பது போன்ற முன்னெச்சரிக்கைகள் தேவைப்படும் நிலையில் இந்திய மருத்தவ ஆய்வுக் கழகம் சில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துவந்தது. தற்போது நோய்ப்பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் பல மருத்தவக் கல்லூரிகளில் ஆய்வுநடத்தப்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் அரசாங்க நிதியுதவியுடன் அங்கீகரிக்கப்பட்ட (கண்டறியும் கருவிகள் அல்லது உதிரிபாகங்கள்) 156 அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சோதனைக்கு ஏற்ற 3 அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதடன், கொரோனா பற்றிய ஆய்வுகளும் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. மேலும், 69 தனியார் ஆய்வகங்களில் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்படுபவர்களின் விவரம், மாதிரிகள் போன்றவற்றை 3 சேகரிப்பு தளங்களில் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக 23 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 13 அரசு மருத்துவ நிறுவனங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
1. கிங்ஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை
2. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை
3. தேனி அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
4. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
5. அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர்
6. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்
7. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
8. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, வேலூர்
9. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
10. கே.ஏ.பி. விஷ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி
11. ஐஆர்டி பெருந்துரை மருத்துவக் கல்லூரி, பெருந்துரை
12. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி
13. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர்
மேலும், கொரோனா பரிசோதனைக்கு ஏற்ற அரசு நிறுவனமாக சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தவிர 9 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் கொரோனா பரிசோதனையை செய்தகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
1. கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
2. அப்பல்லோ மருத்துவ நிறுவனம், கிரீம்ஸ்ரோடு, சென்னை
3. நியூபெர்க் எர்லிச் லேபாரேட்டரி, ராயப்பேட்டை, சென்னை
4. ராமச்சந்திரா லேபாரேட்டரி, போரூர், சென்னை
5. மைக்ரோபயாலஜி லேபாரேட்டரி, வாடவள்ளி. கோயம்புத்தூர்
6. எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒய்.ஆர் கெய்டோண்டே மையம், தரமணி சென்னை
7. கே.ஏ.பி. விஷ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி
8. சென்னை மெடிக்கல் மிஷன் கிளினிக்கல் லெபாரேட்டரி, முகப்பேரு, சென்னை
9. எம்ஐஓடி மருத்துவமனை, மணப்பாக்கம், சென்னை
தமிழகத்தைத் தவிர மகாராஷ்டிரா 32, உத்திரபிரதேசம் 17, மேற்கு வங்கம் 12, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 1, ஆந்திராவில் 1, அருணாச்சலப் பிரதேசத்தில் 1, அசாம் 5, பீகார் 5, சடீஸ்கர் 2, டார்டா நாகர் ஹவேலி 1, டெல்லி 15, குஜராத் 11, கோவா 1, ஹரியாணா 8, ஹிமாச்சல் பிரதேசம் 2, ஜம்மு மற்றும் காஷ்மீர் 4, ஜார்கண்ட் 3, கர்நாடகா 16, கேரளா 12, லடாக் 1, மத்தியபிரதேசம் 7, மணிப்பூர் 2, மேகலாயா 1, மிசோரம் 1, ஒடிசா 6, புதுச்சேரி 1, பஞ்சாப் 4, ராஜஸ்தான் 8, சிக்கிம் 1, தெலுங்கானா 16, திரிபுரா 1, உத்திரகாண்ட் 3 என்ற எண்ணிக்கையில் கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.