வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்கள் பட்டியல்: இந்திய ராணுவம் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் என்ற பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஆவேசமான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் உருட்டுக் கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த தாக்குதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் அதன் பின்னர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வீரர்கள் மரணமடைந்ததாகவும் இதனையடுத்து மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது
இருப்பினும் முதலில் வீரமரணம் அடைந்த 3 வீரர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற 17 பேரின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனை அடுத்து சற்று முன்னர் வீரமரணமடைந்த 20 பேர்களின் பெயர்களை இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
List of 20 soldier who laid down their lives for nation . RIP #IndianArmypic.twitter.com/fVicBHLF7H
— Indian Army Aficionado (@covid10alert) June 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments