வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்கள் பட்டியல்: இந்திய ராணுவம் அறிவிப்பு

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் என்ற பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஆவேசமான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் உருட்டுக் கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த தாக்குதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் அதன் பின்னர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வீரர்கள் மரணமடைந்ததாகவும் இதனையடுத்து மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது

இருப்பினும் முதலில் வீரமரணம் அடைந்த 3 வீரர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற 17 பேரின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனை அடுத்து சற்று முன்னர் வீரமரணமடைந்த 20 பேர்களின் பெயர்களை இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இதய அஞ்சலி செலுத்திய அட்லி!

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

சீன தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்: சிஎஸ்கே டாக்டர் பதவி நீக்கம்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தினமும்

கொரோனா சிகிச்சைக்கு குறைந்த விலையில் மருந்து: கேம் சேஞ்சராக இருக்குமா என எதிர்பார்ப்பு!!!

கொரோனா சிகிச்சைக்கு ஒரு புதிய கேம் சேஞ்சராக இருக்கும் என ஸ்டிராய்டு வகை மருந்து ஒன்றை பிரிட்டன் அதிபர் பரிந்துரை செய்திருக்கிறார்.

சீன ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை எவ்வளவு? அமெரிக்க உளவுத்துறையின் தகவலால் பெரும் பரபரப்பு 

இந்தியா சீன ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த மோதல் உலக நாடுகளையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.