'சாஹோ' படக்குழுவினர்களை வறுத்தெடுத்த சரத்குமார் பட நடிகை

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

பிரபாஸ், ஷராதா கபூர் நடித்த 'சாஹோ' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தபோதிலும் முதல் நாள் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நடிகை லிசா ராய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற Baby Won't You Tell Me என்ற பாடலில் இடம்பெற்ற ஒரு பின்னணி காட்சி, அப்படியே ஒரு ஓவியத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாகவும், அந்த காட்சியையும் அதன் ஒரிஜினல் ஓவியத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சொந்தமாக கிரியேட்டிவ் செய்யும் கலைஞர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

நடிகை லிசாராய், சரத்குமார் நடித்த 'நேதாஜி' படத்தின் நாயகி என்பதும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு: பரபரப்பு செய்தி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அக்டோபரில் விஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீஸ்?

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடும் போட்டியை தவிர்க்க தீபாவளிக்கு

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த ரம்யா கிருஷ்ணன்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்த வாரம் கிராமத்துப்புற கலைகளால் சண்டை சச்சரவு இன்றி ஹவுஸ்மேட்ஸ்கள் போட்டியையும் மறந்து, மறந்த போன கலையை நினைவுபடுத்தினர்.

விஜய் அரசியலுக்கு வந்தால்..? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? என்றும், விஜய் அரசியலுக்கு வந்தால் தான் ஆதரிப்பேன் என்றும்

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்து கவுதம் மேனன் தகவல்!

கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் எப்போது வெளிவரும்