மதுரை மதுப்பிரியர்கள் சாதனை....! கோடிகளில் குவியும் டாஸ்மாக் கல்லா...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக, மது விற்பனை துவங்கியதையடுத்து, மதுரையில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர, இதர 27 மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள், சென்ற 2 தினங்களாக திறக்கப்பட்டுள்ளது. பல கட்சிகள் மதுபானக் கடைகள் திறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்திய நிலையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதை தமிழக மதுபிரியர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். மதுபானங்களை வாங்கி, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு குடிக்கும் அளவிற்கு அடிமையாகி விட்டார்கள். டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் செய்யும் அட்டூழியம், மதுவாங்க வரிசையில் காத்திருக்கும் குடிமகள்கள் என இரண்டு நாட்களாக பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காலை 10 மணிமுதல், மாலை 5 மணிவரை மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
27 மாவட்டங்களில், கடை திறந்த முதல் நாளே கல்லாவில் வசூல் கலை கட்டியது என சொல்லலாம்.
முதல் நாளான, ஜூன் 14 ஆம் தேதி வசூலான மது விற்பனை மதிப்பு - ரூ. 164.87 கோடி
முதலிடம் பிடித்த மதுரை - ரூ. 49.96 கோடி
சென்னை - ரூ.42.96 கோடி
இரண்டாம் நாளான ஜூன் 15-ஆம் தேதி வசூலான மது விற்பனை மதிப்பு - ரூ. ரூ.127.09
மதுரை - ரூ.37.28 கோடி
சென்னை - ரூ.33.41 கோடி
திருச்சி - ரூ. 27.64 கோடி
சேலம் - ரூ.28.76 கோடி
இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.291.96 கோடிக்கு மது விற்பனை வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com