மதுக்கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு: மாற்று வழியை கண்டுபிடித்த மதுப்பிரியர்கள்!
- IndiaGlitz, [Wednesday,June 23 2021]
தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள மதுக்கடைகளை மூட கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து சமீபத்தில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டன என்பதும், ஆனால் அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் இன்னும் மதுக் கடைகள் திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கேரளாவில் மது கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் அந்த மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தமிழக எல்லையில் உள்ள மதுக்கடைகளை மட்டும் மூட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் கேரளாவில் மது வாங்க முடியாவிட்டாலும் வேறு மாவட்டங்களில் மதுவினை வாங்க மாற்று வழியை மது பிரியர்கள் தேடிவருகின்றனர். இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்காத 11 மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் திறந்த அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று மதுவை வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.