close
Choose your channels

லயன் இன் லம்போர்கினி: இந்திய அளவில் டிரெண்டான ரஜினியின் புகைப்படம்

Tuesday, July 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து என்ன செய்தி வெளி வந்தாலும், அவர் ஒருசில நிமிடங்கள் கேட் முன் நின்று பேட்டி அளித்தாலும் அல்லது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டாலும் உடனே இந்திய அளவில் டிரெண்ட் ஆகி விடும் என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டும் இந்த புகைப்படத்தை அவரது அருகில் உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிகிறது. இருப்பினும் அவர் எங்கு செல்கிறார் என்பது தெரியவில்லை. ஒரு சிலர் தனது மகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தானே அழைத்துச் செல்வதாக கூறி வருகின்றனர். இன்னும் ஒருசிலரோ அவர் பண்ணை வீட்டிற்கு செல்வதாக கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டிரைவரை கூட அழைக்காமல் தானே கார் ஓட்டி ரஜினிகாந்த் செல்வதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் எதற்காக காரில் செல்கிறார் என்பது தெரியவில்லை என்றாலும் அவர் கார் ஓட்டும் இந்த ஒரே ஒரு புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ’லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நேற்று இரவு முதல் இப்போது வரை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment