பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி விலகல்… திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி விலகல்… திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பிரபல கிளப் அணியான பார்சிலோனா அணியில் தனது 13 வயது முதல் விளையாடி வருகிறார். சொந்த நாடான அர்ஜென்டினாவை விடவும் இந்த பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி அதிக கோல்களை அடித்துள்ளார். அதோடு வென்றுகொடுத்த கோப்பைகளும் ஏராளம்.


இப்படியிருக்க பார்சிலோனா அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் லியோனல் மெஸ்ஸி இனி எந்த அணிக்கும் சொந்தமானவர் அல்ல. அவருடன் போட்ட 21 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இனி அவர் தனி வீரர் எனத் தெரிவித்து இருக்கிறது. இதனால் லியோனல் மெஸ்ஸி இனிமேல் பார்சிலோனா அணிக்காக களம் இறங்கமாட்டார் என்பதும் உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.


இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் கடும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பார்சிலோனாவுடன் மெஸ்ஸி மேற்கொண்ட 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து மேலும் 5 வருடத்திற்கு அவர் பார்சிலோனாவிற்காக ஒப்பந்தம் செய்யப்படுவார். ஆனால் பார்சிலோனா கிளப்பின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அவருக்கு வெறும் 5% மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும் என்பது போன்ற தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.


இந்நிலையில் மீண்டும் பார்சிலோனாவிற்காக மெஸ்ஸியை விளையாட வைக்கும் முயற்சி நடைபெற்றது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாக இருந்த நிலையில் அந்த ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது. இதற்கு நிதிநிலைமை மற்றும் கட்டமைப்புகளே காரணம் என்றும் பார்சிலோனா கிளப் சார்பாக தகவல் சொல்லப்படுகிறது.

இதனால் உலகப் புகழ்பெற்ற லியோனல் மெஸ்ஸி 21 வருடத்திற்குப் பிறகு அந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார். 36 வயதாகும் மெஸ்ஸி இன்றைக்கும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை பல கிளப் அணிகள் இப்போதே மொய்க்கத் துவங்கி இருக்கிறது.


முன்னதாக கிளப் அணிகளுக்கு மட்டுமே மெஸ்ஸி திறமையாக விளையாடுவார். சொந்த நாட்டைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையே இல்லை. அவருடைய தலைமையில் ஒரு கோப்பையைக் கூட அவரால் வாங்கித்தர முடியவில்லை எனப் பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தை சமீபத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் மெஸ்ஸி முறியடித்தும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona

— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021