பார்ஸிலோனாவில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரான மெஸ்ஸி, கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி கொண்டிருந்த நிலையில் அந்த அணியில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பார்சிலோனா அணிக்கும் மெஸ்ஸிக்கும் இடையே ஒப்பந்தம் தொடரவில்லை என்பதால் அவர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய மெஸ்ஸி அந்நாட்டில் இருந்து வெளியேறும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கண்ணீருடன் பேசிய வீடியோவை பார்சிலோனா அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் மெஸ்ஸி தனக்கு இத்தனை ஆண்டுகள் ஆதரவு கொடுத்து பார்சிலோனியா அணிக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறி அவர் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.
This is the word of Leo #Messi: pic.twitter.com/k0btQ7k1py
— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com