close
Choose your channels

லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பது உண்மையா?

Friday, November 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததை அடுத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் 'சண்டக்கோழி' இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை லிங்குசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, 'சிம்பு படத்தை நான் இயக்குவதாக கூறுவது முற்றிலும் வதந்தியே. தற்போது என்னுடைய கவனம் முழுவதும் விஷால் நடிக்கவுள்ள 'சண்டகோழி 2' படத்தின் ஸ்கிரிப்ட் அமைப்பதில் மட்டுமே உள்ளது. வரும் ஜனவரியில் 'சண்டகோழி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment