'பையா 2' படத்தில் கார்த்தியும் இல்லை, தமன்னாவும் இல்லை.. லிங்குசாமி செம பிளான்..!

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’பையா’ திரைப்படம் கலந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் பாகத்தில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை என்றும் அதற்கு பதிலாக புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

’பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா ஹீரோவாகவும் ஜான்விகபூரை நாயகியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது உண்மை என்றால் ஜான்விகபூர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் ’பையா 2’ படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'சூர்யா 42' படம் குறித்த வதந்தி.. விளக்கமளித்த தயாரிப்பாளர்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் இதுவரை இல்லாத அளவில் 13 மொழிகளில் உருவாகி வரும்

14 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் மீண்டும் த்ரிஷா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் வீடியோ!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

ராஜ்&டிகே வெப்தொடரில் இருந்து சமந்தா விலகலா? முக்கிய அறிவிப்பு!

 'தி பேமிலி மேன்' என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ்&டிகே  இயக்கத்தில் உருவாகும் அடுத்த வெப் தொடரில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. 

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? பட்ஜெட் ரூ.200 கோடிக்கும் மேல்?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 62' படத்தின் பட்ஜெட்டும் ரூ.200 கோடிக்கு அதிகம்

ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்!

7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்றும்,  ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை