லிங்குசாமியின் 'தி வாரியர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கி வரும் ‘தி வாரியர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆனந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி அதன்பின் சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகிவரும் ‘தி வாரியர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘தி வாரியர்’ படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#THEWARRIORR is coming to you on the 14th of JULY!??
— RAm POthineni (@ramsayz) March 27, 2022
Love..#RAPO pic.twitter.com/iBVbO7jCqL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments