லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் ஆர்யா இல்லை, இந்த நடிகர் தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘பையா’. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக கசிந்து வருகின்றன.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் போனிகபூர், தனது மகள் ஜான்வி கபூர் ’பையா 2’ உள்பட எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து ‘பையா 2’ படத்தில் ஆர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘பையா 2’ படத்தில் முதல் பாகத்தில் நடித்த கார்த்தியே நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியின் 28வது படமாக இந்த படம் அமையும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்தி இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், தமன்னாவும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments