இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றித் திரைப்படங்கள் உருவாகி உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

லிங்குசாமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த திரைப்படம் ’நான்தான் சிவா’. கடந்த 2013ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படம் பொருளாதார பிரச்சனை காரணமாக அவ்வப்போது நிறுத்தப்பட்டு தற்போது இந்த படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தை ஆர் பன்னீர்செல்வம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்

இந்த நிலையில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் டி இமான் கம்போஸ் செய்த பாடல்கள் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இமானின் மெல்லிசை பாடல்களை கேட்க அனைத்து இசை ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் மகன் வினோத் நாயகனாகவும், அஷ்ரிதா ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த் நாராயணன் வில்லனாக நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
 

More News

'முந்தானை முடிச்சு' ரீமேக்: பாக்யராஜூடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்: மீண்டும் கமல் நடிப்பாரா?

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம்' என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

புதிய வைரஸ்: பயனாளிகள் ஜாக்கிரதை

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது புதிய வைரஸ் ஒன்று தோன்றி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளை மோசடி செய்து வருவது

ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5000க்கும்

12 ஆயிரத்தை தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் மாலையில் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை