'ஜோக்கர்' ராஜூமுருகன் என்னிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. லிங்குசாமி
- IndiaGlitz, [Saturday,August 20 2016]
பிரபல பத்திரிகையாளரான ராஜூமுருகன் தனது முதல் படமான 'குக்கூ' படத்திலேயே தனது தனித்திறமையை நிரூபித்த நிலையில் அவருடைய இரண்டாவது படமான 'ஜோக்கர்' அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளது. பல திரையுலக விஐபிகள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் இயக்குனர் லிங்குசாமி, 'ஜோக்கர்' படம் குறித்து என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம், இந்த நேரத்தில் நாம் ஞாபகப்படுத்த வேண்டிய முக்கிய தகவல் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் இந்த ராஜூமுருகன் என்பதே ஆகும்.
லிங்குசாமி, 'ஜோக்கர்' படம் குறித்து கூறியதாவது: நான் ஜோக்கர் படத்தின் போஸ்டரை முதன்முறையாக பார்த்தபோது சின்னதொரு Toilet-யின் பிளாட்பாரம் அருகே குரு சோமசுந்தரம் இருக்கும் அந்த ஸ்டில்லை மட்டும் தான் பார்த்தேன். இதெல்லாம் ஒரு போஸ்டராக எதற்காக பீல் பண்ணி இருக்கிறார். இதை போன்ற ஒரு போஸ்டரை ஏன் போட வேண்டும் வேறு ஏதாவது ஒரு டிசைன் பண்ணி இருக்கலாமே இதை ஏன் ?? அவர் போஸ்டராக வைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
படம் பார்த்து முடித்த பிறகு இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா ?? இப்படி ஒரு கதை யோசிக்க முடியுமா? என்பதை எல்லாம் தூக்கி போட்டு விட்டு எந்த ஒரு Formula-விலும் சிக்காமல் ரொம்ப ஒரு முக்கியமான ஒரு படமாக இப்படத்தை என்னை பார்க்க வைத்துவிட்டார்.
என்னுடைய உதவி இயக்குநராக இருந்து அவர் என்னிடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் கற்றுக்கொண்ட இடம் வேறு அவர் சொல்ல வரும் விஷயம் வேறு. இப்படம் முழுமையாக புதுமையான ஒரு படைப்பாகும் , மிகவும் தைரியமான ஒரு படைப்பாகும் நான் தான் அவரிடம் இருந்து கற்று கொண்டுள்ளேன். அவர் என்னுடைய உதவி இயக்குநராக இருந்தது எனக்கு பெருமை.
ஜோக்கர் மிக முக்கியமான ஒரு பதிவு. இப்படத்தை தைரியமாக தயாரித்த பிரபுவுக்கும் பிரகாசுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இது தான் ராஜு முருகனின் சரியான படம். இதை செய்வதற்கு அவருக்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.இந்த படம் நிச்சயம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மொழிகளில் மொழி பெயர்ப்பாகி போகும் என்று நான் நம்புகிறேன்.
அடுத்த கட்டமாக அமீர் கான் வரை இப்படத்தை பார்த்துவிட்டு படத்தை அங்கே எடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இது வரை இதை போன்ற ஒரு படத்தை தமிழ் சினிமாவில் பார்க்கவில்லை என்று வார்த்தைக்காக பலதடவை கூறியுள்ளோம் இந்த படம் தான் அந்த படம்.
இவ்வாறு லிங்குசாமி கூறியுள்ளார்.