90-ஸ் கிட்ஸ்களுக்கு இப்படியொரு வேதனையா? உடலுறவு ஆர்வம் குறைந்து வருவதாகத் தகவல்…!
Send us your feedback to audioarticles@vaarta.com
நவீன வாழ்வியல் முறை, உணவு, பணிச்சுமை என்று பல்வேறு காரணங்களால் இன்றைய இளைஞர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 80, 90 களில் பிறந்த இளைஞர்கள் மத்தியில் பாலியல் ஆர்வம் குறைந்து இருப்பதாக பழைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டிய தகவல் தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் மற்றும் செக்ஸ் பொம்மைகளை விற்றுவரும் லவ் ஹனி எனும் நிறுவனம் இரண்டும் இணைந்து கடந்த 2021 இல் நடத்திய உடலுறவு பற்றிய ஆர்வம் குறித்த ஆய்வு ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டு இருந்தன. அந்தத் தகவல்கள்தான் தற்போது மீண்டும் கவனம் பெற்று இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய இளைஞர்கள் பலர் நவீன வாழ்வியல் முறை, பணிச்சுமை, உணவு என்று பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு கடுமையான மன உளைச்சலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் 1980-1990 களில் பிறந்தவர்கள் இன்றைக்கு 18-45 வயது மதிக்கத்தக்கவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது பாலியல் ஆர்வம் மிகுந்து காணப்படக்கூடிய வயதாகக் கருதப்படுகிறது.
ஆனால் இண்டியானா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் Generation Y எனப்படும் 1980-1990 களில் பிறந்த தம்பதிகளிடையே 25.8% பாலியல் நாட்டம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல Generation X எனப்படும் 1965 – 1980 களில் பிறந்த தம்பதிகளிடையே 21.2% பாலியல் நாட்டம் குறைந்து காணப்படுவதாகவும் Generation Z எனப்படும் 1990களில் இறுதி மற்றும் 2010 க்கு முன்பு பிறந்த இளைஞர்களிடம் 10.5% பாலியல் நாட்டம் குறைந்து காணப்படுவதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.
பொதுவாக 1980-90 களில் பிறந்த குழந்தைகள் அனைவரும் கடுமையான பொருளாதார மந்த நிலையில் தங்களுடைய வாழ்வியலை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பணிச்சுமை, பொருளாதாரக் காரணிகளால் அவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களிடையே பாலியல் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது என்பதுபோன்ற கருத்துக் கணிப்புகள் முன்வைக்கப் படுகின்றன.
இதைத்தவிர பாலியல் ஆர்வம் குறைந்து காணப்படுவதற்கு தம்பதிகளிடையே மனம் விட்டு பேசாததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும் இண்டியானா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இளைஞர்கள் பலர் உடலுறவை வலி கொண்டது என்றும் கடினமானது என்றும் கருதிவருவதும் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments