மனுச பயகூட சேர்ந்தாலே இப்படித்தா… பார்வையாளர்களைத் தரக்குறைவாகத் திட்டிய கிளிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்தில் உள்ள ஒரு பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கிளிகள் பார்வையாளர்களைத் தரைகுறைவாகப் பேசிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தலைநகர் லண்டனில் உள்ள லன்கோல்ன்ஷைர் எனும் பூங்காவிற்கு தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்தப் பூங்காவிற்காக சில தினங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து சாம்பல் நிற கிளிகள் வரவழைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட பில்லி, எரிக், டைசன், ஜேடே, எலிசி எனும் பெயர்க் கொண்ட 5 கிளிகள் சாம்பல் நிறத்தால் ஆனவை என்றும் மேலும் இந்த வகைக் கிளிகளிகள் மனிதர்களின் சத்தத்தை மிக வேகமாக உள்வாங்கி கொண்டு அதைக் கற்றுக் கொள்ளும் பழக்கம் கொண்டவை எனவும் கருதப்படுகிறது. பூங்காவிற்கு வந்து சில தினங்களே ஆன நிலையில் அங்கு வந்துசெல்லும் பார்வையாளர்களை இந்த 5 கிளிகளும் தரக்குறைவாக பேச ஆரம்பித்து இருக்கிறது.
அதிலும் ஒரு கிளி பார்வையாளர்களைப் பார்த்து ஏளமான சிரிக்குமாம். இன்னொரு கிளி அவர்களைத் தகாத வார்த்தைகளால் வசை பாடுமாம். இப்படியே இந்த 5 கிளிகளும் செய்து வந்ததைப் பார்வையாளர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கின்றனர். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நிர்வாகம் தற்போது இந்த 5 ஆப்பிரிக்க கிளிகளையும் தனியான ஒரு இடத்தில் வைத்து பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout