I Support farmers… கிராமி விருதில் ஒங்கி ஒலித்த ஒற்றைக் குரல்…மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறுமாறு இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் டெல்லி உள்ளிட்ட மாகாண எல்லையில் இருந்தவாறு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தைக் குறித்து அமெரிக்க பாப் பாடகி நாம் ஏன் இதுகுறித்து பேசவில்லை என்று டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதனால் 100 நாட்களைக் கடந்தும் கவனம் பெறாத இந்த விவகாரம் உலக அளவில் பெரும் டிரெண்டிங் ஆனது. பின்னர் ஆதரவு, எதிர்ப்பு என்ற ஊசலாட்டங்களுடன் இந்த விவகாரத்திற்கு இன்னும் முடிவு எட்டப்படாமலே இருக்கிறது.

இந்நிலையில் கிராமி விருது விழாவில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலம், இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வந்துள்ளார். அவரது புகைப்படம் தற்போது உலக அளவில் மீண்டும் கவனம் பெற்று இருக்கிறது.

இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டு இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 63 ஆவது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மாகாணத்தில் உள்ள கன்வென்சன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், தொகுப்பாளினியுமான லில்லி சிங் கலந்து கொண்டுள்ளனார். இவர் அந்த விழாவிற்கு வருகை தந்தபோது “I Support farmers” என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட் முகக்கவசத்தை அணிந்து வந்துள்ளார். இது விழாவில் கலந்து கொண்ட பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. மேலும் லில்லி சிங் அந்த விழாவில் எடுத்துக் கொண்ட தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு உள்ளார்.

டிவிட்டரில் 5 மில்லியன், யூடியூபில் 15 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட லில்லி சிங்கின் I Stand wtih farmers என்ற ஹேஷ்டேக் இட்ட அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. இந்தியாவின் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்து ஊடகங்கள் போதுமான அளவு கவனம் செலுத்தாமலே இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் லில்லி சிங் வெளியிட்ட புகைப்படத்தால் விவசாயப் போராட்டம் மீண்டும் கவனம் பெற்று இருப்பதாகப் பலரும் கூறிவருகின்றனர்.