நித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா??? மொலோசியா குடியரசு பிறந்த கதை!!!

  • IndiaGlitz, [Monday,May 25 2020]

 

பண்டைய கிரேக்க வரலாற்றில் மொலோசியா என்ற நகரம் மிகவும் பிரபலமானது. ஆனால் தற்போது அதே பெயரில் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெல்ஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனி குடியரசு நாடு மொலோசியா. இந்த நாட்டில் மே, 2020 ஆண்டின் நிலவரப்படி மொத்த மக்கள் தொகை 30 பேர் மட்டுமே. இவர்களைத் தவிர 4 நாய்கள் இருப்பதாக விக்கிபீடியா தகவல் தெரிவிக்கிறது. இந்நாட்டின் மொத்த பரப்பளவு 13 கிலோ மீட்டர். ஆனால் 11 கட்டிடங்கள் இருக்கின்றன. ஒரு தபால் நிலையம், தனி வங்கி, சிறை கூட அமைக்கப் பட்டு இருக்கிறது. மொலோசியா மக்கள் குடியரசின் அதிபர் கெவின் பாக் தான் இந்த நாட்டை உருவாக்கினார். அதோடு இந்த நாட்டில் வெங்காயம், கீரை, கெளுத்தி மீன் களை சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. மதுபான கூடமும் இருக்கிறது. ஆனால் புகைப்பிடிப்பதற்கு அனுமதி இல்லை. மற்ற போதைப் பொருட்களுக்கும் இந்நாட்டில் அனுமதி கிடையாது.

இந்த நாட்டிற்கு எப்படி போகலாம் என்ற ஆர்வம் சிலருக்கு தொற்றி இருக்கும். விசா எல்லாம் தேவையே கிடையாது. ஆனால் பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவரும் அதிபர் கெவின் பாக் அவர்களுக்கு சொந்தக்காரர்கள் தான். தனி நீதிமன்றம் கூட செயல்படுகிறது. 2007 முதல் மற்ற நாட்டு விவாகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிபர் கெவின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதேபோல மற்றவர்களுக்கும் இந்நாட்டில் குடியுரிமை வழங்கப்படுவது கிடையாது. நாட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அதிபர் கெவின் பாக் அறிவித்து இருக்கிறார். விஷயம் இதல்ல, எப்படி இந்த நாட்டை உருவாக்கினார் என்பதுதான் சுவாரசியமே.

அதிபர் கெவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்துதான் ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தீவிர சிந்தனைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவரது சிந்தனைக்கு ஏற்றவாறு போர்லேண்ட் பக்கத்தில் ஒரு குழந்தை குடியரசு நாடு ஏற்கனவே உருவாக்கப்பட்டு இருந்தது. அதாவது 1977 மே 26 ஆம் தேதி இல் பாக் மற்றும் ஜேம்ஸ் ஸடீல்மேன் என்ற இருவரும் சேர்ந்து The Grand Republic Vuldstein என்ற குடியரசு நாட்டை நிறுவி இருந்தனர். அதற்கு அதிபராக ஜேம்ஸ் ஸ்டில்மேன் நியமிக்கப் பட்டார். இல்பாக் நாட்டை விட்டு சென்றதும் 1980 இல் இந்த நாடு எடெல்ஸ்மேன் இராச்சியம் என அழைக்கப்பட்டது. அடுத்து 1988 இல் ஜரியா இராச்சியம் எனவும் பெயர் மாற்றப்பட்டது. அதுநாள் வரை அந்நாடு ஒரு நாடோடி அரசாங்கம் என்றே அழைக்கப்பட்டது. காரணம் நாட்டில் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. குடிமக்கள் யாருமே கிடையாது. 1922 இல் ஜேம்ஸ் ஸ்டில்மேன் ஐரோப்பாவிற்கு சென்றார். அங்கிருந்து திரும்பிய பிறகு பலருக்கு நாட்டில் தங்குவதற்கு இடம் கொடுக்கப்பட்டது.

பின்னர் இந்த அரசாங்கம் நெவாடாவிற்கு அருகில் மாற்றப்பட்டது. அரசாங்கம் மாற்றப்பட்டபோது இப்போதைய அதிபர் கெவின் பாக் 1955 இல் மாற்றப்பட்ட 15 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி ஒரு தனி குடியரசையே கட்டி அமைத்தார். 1988 இல் முறையான நிர்வாகம், வீடுகள் போன்றவை கட்டமைக்கப் பட்டன. பின்னர் 1998 இல் கம்யூனிஸ்களின் ஆதரவோடு இந்த அரசாங்கத்தின் நிர்வாகம் மாற்றி அமைக்கப் பட்டது. அடுத்து 1999 பிப்ரவரியில் தேசிய குடியரசு நாடாக மாற்றப்பட்டு முறையான அறிவிப்பு வெளியாது. பின்னர் செப்டம்பர் 3, 1999 இல் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவை விலக்கிவிட்டு மக்கள் ஜனநாயகக் குடியரசு நாடாக மாற்றி அமைக்கப்பட்டது. மக்கள் ஜனநாயகக் குடியரசின் அதிபராக கெவின் பாக் பதவியேற்றுக் கொண்டார். தன்னை விட 16 வயது குறைந்த தனது மனைவியே அடுத்த அதிபர் என்ற அறிவிப்பும் வெளியானது. அந்நாட்டில் இருக்கும் மக்கள் தனது இறப்பிற்கு பிறகு இங்கே இருக்கவும் செய்யலாம். அல்லது அமெரிக்காவிற்கு இடமாறிக் கொள்ளலாம் என்ற சுதந்திரத்தையும் அதிபர் வழங்கியிருக்கிறார்.

தற்போதுவரை, இந்த நாடு தான் உலகிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பு, நாட்டின் நிர்வாகம் போன்ற அனைத்து செயல்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய குடியரசு நாட்டில் போதாமையோடு வாழ்வதற்கு பதிலாக இப்படி ஒரு தேசம் குடியுரிமை வழங்கினால் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு சாகலாம் என்று கூட இந்த நாட்டைக் குறித்து சிலர் கருத்துக் கூறத் தொடங்கி இருக்கின்றனர்.