ஐபிஎல் போன்று பட வெளியீடும் நிறுத்தப்படுமா? பிரபல நடிகர் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது ஒருசில அரசியல் கட்சிகளும், திரையுலகை சேர்ந்த ஒருசிலரும் காட்டிய தீவிரமான எதிர்ப்பு காரணமாக சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை தடுத்து நிறுத்தி உலகின் கவனத்தை கவர்ந்தது போல் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை திரைப்படங்கள் வெளியீடும் நிறுத்தப்படுமா? என்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..என்று கூறியுள்ளார்.
ஒன்றரை மாத வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின்னர் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதால் வரும் வெள்ளி முதல் புதிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உதயநிதி இந்த கேள்வியை எழுப்பியுள்ளதால் திரையுலகினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments