'லைகர்' படுதோல்வியால் அதிர்ச்சி அடைந்த சிம்பு பட நடிகை: ஆறுதல் கூறிய விஜய் தேவரகொண்டா!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கரன் ஜோகர், பூரி ஜெகன்நாத் ஆகியோர்களும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் என்றாலும் சார்மிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று என்று தெரிகிறது.

சிம்புவின் ’காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமாகி அதன்பின் ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து அவர் கடந்த பல வருடங்களாக சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக இதில் இழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘லைகர்’ பட தோல்வியால் அதிர்ச்சியில் இருந்த சிம்பு பட நடிகை சார்மிக்கு ஆறுதல் கூறும் வகையில், தான் வாங்கிய சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை நடிகர் விஜய் தேவரகொண்டா சார்மியிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘லைகர்’ திரைப்படம் இதுவரை 50 முதல் 60 கோடிகள் மட்டும்தான் வசூல் செய்துள்ளது என்றும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை ஆகியவைகளை சேர்த்தாலும் சுமார் 30 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பிக் கொடுத்து விட்டதால் நஷ்டம் ஓரளவு குறையும் என்று தெரிகிறது.

ஏற்கனவே ’லால்சிங் சத்தா’ என்ற படம் படு தோல்வியை சந்தித்ததால் அமீர்கான் தனது சம்பளம் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தூக்கி எறிய எளிதில் மனசு வரவில்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 

தூக்கி எறிய எளிதில் மனசு வரவில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பத்திற்கு 10ஆம் வகுப்பு மாணவர் காரணமா? புதரில் வீசப்பட்ட குழந்தை!

 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பம் ஆனதற்கு 10ஆம் வகுப்பு மாணவர் காரணம் என்ற நிலையில் மாணவி கழிவறையில் குழந்தை பெற்று அந்த குழந்தையை புதரில் வீசியதாக வெளிவந்திருக்கும்

பைத்தியக்கார உலகில் வாழ்கிறோம்: சத்குரு ஜக்கிக்கு வாழ்த்து கூறிய தமன்னா!

 நாம் அனைவரும் வாழும் பைத்தியக்கார உலகில் நீங்கள் அனைவரையும் வழி நடத்த வேண்டியது முக்கியம் என நடிகை தமன்னா சத்குரு ஜக்கிவாசுதேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு முறையும் திருமணம் செய்ய தயார்: விஜய் டிவி புகழ் கொடுத்த விளக்கம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும்

மகளை படிப்பில் முந்திய மாணவன்: ஆத்திரத்தில் கொலை செய்த தாய்!

https://tamil.asianetnews.com/crime/the-student-s-parents-poisoned-the-cold-drink-of-a-student-who-excelled-in-studies-rhmtvv