மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம்… US செல்லும் படக்குழு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வரும் பூரி ஜெகன்நாத் தற்போது “லைகர்“ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முன்னணி நடிகராக இருந்துவரும் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக மதிக்கப்படும் மைக் டைசன் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் எனும் 4 மொழிகளில் எடுக்கப்படும் “லைகர்“ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோவாவில் நடைபெற்றது. தற்போது இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் மைக் டைசன் மற்றும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மைக் டைசன் நடிக்கும் காட்சிகளுக்காக தற்போது லைகர் படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது. Mixed Martial Arts பற்றிய இந்தக் கதையில் மைக் டைசன் Iron Mike எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு அவர் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் லைகர் படத்தில் விஜய் தேவகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடிக்கிறார். இவரைத் தவிர ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை பாலிவுட் பிரபலம் கரண் ஜோகர், நடிகை சார்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com