குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல வட இந்திய சாமியார் ஆசாராம்பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவந்தது. இந்த தீர்ப்பில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என திர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை விபரம் மாலையில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் அவருக்கான தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் சாமியார் ஆசாராம் பாபு சாகும் வரை சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதற்காக தீர்ப்பு விபரங்களை முழுவதுமாக படித்து வருவதாகவும் சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரம செய்தி தொடர்பாளர் சற்றுமுன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

More News

விஜய் ஆண்டனியின் 'காளி' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் திடீர் விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் ஒன்றாகிய டெல்லி அணி

படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு: தேசிய விருது பெற்ற நடிகை

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் கடந்த சில மாதங்களில் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வருகின்றனர். 

சாமியார் ஆசாராம் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல சாமியார் ஆசாராம் பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குரங்கு செல்பி காப்புரிமை வழக்கில் பீட்டாவுக்கு கிடைத்த தோல்வி

சிம்பன்ஸி குரங்கு ஒன்று எடுத்த செல்பி புகைப்படம் உலகம் முழுவதும் வைரலான நிலையில் இந்த புகைப்படத்திற்கு காப்பீடு கோர குரங்கிற்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.