வெள்ளி கிரகத்தில் உயிரினமா… பரபரப்பை ஏற்படுத்தும் புதுத்தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,September 15 2020]

 

வெள்ளி கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்குத் தேவையான பாஸ்பீன் வாயு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த தகவலால் விஞ்ஞானிகளிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் வணிமண்டலத்தில் உள்ள வேறு எந்த கிரகத்திலும் இதுபோன்ற வாயுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இதனால் வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்றும் விஞ்ஞானிகளிடையே விவாதம் எழுப்பப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஜானே கிரேவ்ஸ் எனும் விஞ்ஞானி தலைமையிலான ஆய்வுக்குழு வெள்ளி கிரகத்தைக் குறித்து தீவிரமான ஆய்வில் ஈடுபட்டனர். ஹவாய் மற்றும் சிலியின் அட்டகாமா பாலைவனப் பகுதிகளில் இருந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள அமில மேகங்களில் பாஸ்பீன் வாயு இருப்பதற்கான தடயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையாகவே வெள்ளி கிரகத்தில் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். அதுவும் பகல் நேரங்களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதற்குத் தேவையான வெப்பநிலை வெள்ளியில் நிலவும். இதனால் வெள்ளி கிரகத்தை குறித்த ஆய்வுகளில் எப்போதும் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் (45 மைல்) பாஸ்பீன் வாயுவிற்கான தடயத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கரிமப் பொருட்கள் எரிவதன்மூலம் வெளியேறும் வாயுவான இந்த பாஸ்பின் பொதுவாக நிறமற்றது மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும் ஆகும். பாஸ்பீன் வாயுவில் ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் என்பது மனிதர்கள் உயிர் வாழ தேவையான ஒரு வாயு ஆகும். வெள்ளிக் கிரகத்தில் ஹைட்ரஜன் அடங்கியுள்ள பாஸ்பீன் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் வெள்ளிக்கிரகத்திலும் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாக இருப்பதாகச் சிலர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் நேச்சர் வானியில் பத்திரிக்கை இந்த நிகழ்வு குறித்து வேறுவிதமாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறது. அதில் “இத்தகைய பாஸ்பீன் இருப்பது வினஸில் உயிர்கள் வாழ்ந்ததற்கான எதையும் நிரூபிக்கவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆயினும் வெள்ளி கிரகத்தின் உடைந்த மேற்பரப்பில் சுழலும் மேகங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே பாஸ்பீனை மிக விரைவாக உமிழ்கின்றன எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கார்டிஃப் பல்கலைக் கழக இயற்பியல் மற்றும் வானியல் பள்ளியைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் ஜேன் கிரேவ்ஸ், பாஸ்பீன் மட்டுமே இருப்பது பூமியின் அடுத்த பக்கத்து அண்டை கிரகங்களின் உயிர் வாழ்க்கைக்கு சான்றாக இல்லை எனத் தெளிவு படுத்தியிருக்கிறார். மேலும் ஒரு கிரகத்தில் பாஸ்பீன் ஏராளமாக இருந்தாலும் கூட அது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. வேறு அங்கு நிலைமைகள் மிகவும் சூடாகவும் வறண்டதாகவும் இருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

More News

அசத்தும் கண்டுபிடிப்பு… 10 அடி தூரத்தில் இருந்தே மற்றவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் ஹெல்மெட்!!!

துபாய் நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தூரத்தில் இருந்து கொண்டே பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் நவீன ஹெல்மெட் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளனர்

கொரோனா தடுப்பூசி கிடைக்க இன்னும் 4, 5 ஆண்டுகள் ஆகுமா??? பீதியைக் கிளப்பும் தகவல்!!!

ரஷ்யா தான் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை நேற்றுமுன்தினம் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியானது.

ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; ராகுலை நம்பிக் களமிறங்கும் பஞ்சாப்

ஐபிஎல் அரங்கில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்குத் திணறும் அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

சினிமா வசனம் பேசி மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்: பாஜக பிரபலம்

சினிமா வசனம் பேசி மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என பாஜக பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எய்ம்ஸ்-இல் எம்பிபிஎஸ் படித்த 25 வயது டாக்டர் கொரோனாவுக்கு பலி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த 25 வயது இளம் டாக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது