நாம் இறந்த பிறகு எங்கே போகிறோம்? ஜோதிடர் கூறும் ஆச்சர்யத் தகவல்கள்!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

ஒரு மனிதன் கை, கால்களை அசைத்துக் கொண்டு, சாப்பிட்டு உயிர்வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது எனர்ஜி. அதாவது நம்முடைய உடல் இயக்கத்திற்கு நம்முடைய உடலில் இருக்கும் சக்திகளின் சேர்க்கைதான் காரணமாக இருக்கிறது என அறிவியல் கூறுகிறது. இந்த எனர்ஜி அளவுகளில் மாறுபாடு தோன்றும்போது மனிதனின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை உடலில் இருக்கும் எனர்ஜி முற்றிலும் குறைந்து போகும்போது நமது உடல் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. இதனால் உயிரிழந்து விடுகிறோம். இப்படி உயிரிழக்கும் உடலானது நாம் புதைப்பதாலோ அல்லது எரிப்பதாலோ இயற்கை எனர்ஜிகளோடு கலந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற கருத்துகள் முழுவதும் அறிவியலை மட்டுமே நம்புகின்றன. ஆனால் இந்த அறிவியலும் முழுமையாக அறியப்படாதது எனக் கருதும் சிலபேர் அறிவியலைத் தாண்டிய அமானுஷ்யங்கள் இருப்பதாகவே நம்புகின்றனர்.

அந்த வகையில் ஒரு உயிர் இறந்த நிலையில் என்னவாகிறது? அது எங்கே போகிறது? இறக்கும் உடலுக்கு என்ன நடக்கிறது? இறப்பு சடங்குகளை நாம் அவசியம் செய்ய வேண்டுமா? இந்தச் சடங்குகளினால் என்ன வித்தியாசங்கள் வருகின்றன? என்பது போன்ற எண்ணற்ற சந்தேகங்களுக்கு ஜோதிட விபூஷ்ண பிரம்மஸ்ரீ இராம்ஜி சுவாமிகள் பதில் அளித்துள்ளார்.

மேலும் மறுஜென்மம் இருக்கிறதா? என்ற முக்கியமான கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.