close
Choose your channels

விக்னேஷ் சிவன் பட டைட்டிலுக்கு எதிர்ப்பு.. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் நோட்டீஸ்..!

Sunday, January 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தின் டைட்டிலை சமீபத்தில் அறிவித்த நிலையில் அந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ’எல்ஐசி’ அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் தனக்கு சொந்தமானது என ஏற்கனவே ஒரு இயக்குனர் போர்க்கொடி தூக்கிய நிலையில் தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி நிறுவனம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீஸில் ‘எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயர் என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் தங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களில் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும், இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை விக்னேஷ் சிவன் படக்குழு எப்படி அணுகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment