வீரமரணம் அடைந்த வீரரின் உடல் வருவதற்குள் காப்பீட்டு தொகையை அளித்த எல்.ஐ.சி

  • IndiaGlitz, [Saturday,February 16 2019]

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புலாவா பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். தற்போது வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த 44 வீரர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குரு. இவரது மரணச்செய்தி அறிந்த ஒருசில மணி நேரத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் அவரது பாலிசிக்கான தொகையான ரூ.3,82,199 தொகையை அவரது நாமினியின் வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டது.

இந்த பணத்தை யாரும் கிளைம் செய்யாமலேயே, இறப்பு சான்றிதழ் உள்பட எந்தவித ஆவணங்களையும் கேட்காமலேயே பணத்தை வங்கிக்கணக்கில் எல்.ஐ.சி டெபாசிட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குரு விஷயத்தில் எல்.ஐ.சி காட்டிய வேகத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

More News

திடீரென மதம் மாறிய டி.ராஜேந்தர் மகன்

நடிகர், இயக்குனர், உள்பட பல அவதாரங்களில் ஜொலித்து வரும் டி.ராஜேந்தர் சமீபத்தில் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் சென்சார் தகவல்

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்காக விண்ணப்பிக்கப்பட்டதாகவும் நேற்று தயாரிப்பாளர் கூறிய செய்தியை பார்த்தோம்.

சிக்கிய மரண வாக்குமூலம்: யாஷிகா காதலன் கைது!

விமல் நடித்த 'மன்னர் வகையறா' உள்பட ஒருசில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவருமான ஷீலா ஜெபராணி என்ற நடிகை யாஷிகா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை

இணையத்தில் வைரலாகும் செளந்தர்யா-விசாகன் ஹனிமூன் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா, கடந்த 11ஆம் தேதி தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் தமிழக முதல்வர், துணைமுதல்வர்

சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் அஜித் திடீர் சந்திப்பு!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஆறு வாரங்களை கடந்தும் இன்னும் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது