நடிகராகிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்: எந்த படத்தில் தெரியுமா?

லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன் என்பது அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி வனிதா திருமணம் விஷயத்தில் இவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படத்தில் சாந்தனு ஹீரோவாகவும் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவியும் நடித்து வருகிறார்கள். மேலும் மனோபாலா யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் தயாரிப்பாளர் ரவிந்திரனே நடித்து வருவதாக தெரிகிறது இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.