சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்க போவது இவரா? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’பத்துதல’ படத்தில் நடிக்கப் போகிறார் என்பதும் அதனை அடுத்து கவுதம்மேனன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் அவர்கள்
பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு
என்று கவிதை வடிவில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம் என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்
இந்த நிலையில் மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Mass...kolai mass...
— LIBRA Production (@LIBRAProduc) April 12, 2021
Patha theriyuradhu nadipu...
Palaginathan theriyum natpu...
Ivar mela sila peruku verupu...
Athuku avaru illai porupu...#ProudSTRfan
We both talk less genrally...but ppl talk about us more... thats why he is STR and am FAT MAN...
Stay tuned... ?????? pic.twitter.com/4CMoWHJZ1Q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com