கவினின் 'லிஃப்ட்' படத்தில் என்ன பிரச்சனை: விளக்க அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவின் நடிப்பில் ‘லிஃப்ட்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து லிப்ரா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிஃப்ட்’ திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50% முன்பணம் செலுத்தி உள்ளோம். மீதி 50 சதவீதம் தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை அவர் எடுப்பதில்லை. இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.
சங்கத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் நிறுத்து பட தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது லிப்ட் பட தயாரிப்பாளர் லிப்ரா புரோடக்சன் செய்து கொண்ட ஒப்பந்தம் முறித்து கொள்ளப்பட்டது என தானாக ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘லிஃப்ட்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை இன்னும் எங்கள் அகையில் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lift theaterical rights remains only with libra. We will hit theatres in October. The movie is meant for theatres and i will stand by that. #lift@onlynikil@thinkmusicindia@VineethVarapra1@Actor_Amritha pic.twitter.com/pcy5TCCaEF
— LIBRA Productions (@LIBRAProduc) September 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments