டிஐஜி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதில் ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராண ராவ் மீது, பெங்களூர் சிறைத்துறை டிஐஜி ஆக பணிபுரிந்த ரூபா ஐபிஎஸ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனை கடுமையாக மறுத்த கர்நாடக மாநில சிறைத்துறை  டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா மீது அவமதிப்பு வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதன்படி தன்மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறிய டிஐஜி ரூபா, தனக்கு நஷ்ட ஈடாக ரூ.20 கோடி தர உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட பெங்களூரு நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ரூபா பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

தன்மீது பதிவு செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு குறித்து டிஐஜி ரூபா கூறுகையில், 'ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது அடிப்படை ஆதாரமற்றது' என்று கூறியுள்ளார்.

More News

சசிகுமாரின் 'கொடிவீரன்' ரிலீஸ் தேதி மாற்றம்

'கொடிவீரன்' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி புரமோஷன்களும் ஜோராக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுருந்தது

தேர்தலுக்கு பின் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது.

அஜித், விஜய் ஆசானுக்கு கிடைத்த புதிய பதவி

தமிழகர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று சிலம்பக்கலை. இன்றும் கிராமங்களில் திருவிழாவின்போது சிலம்பச்சண்டை ஒரு முக்கிய பகுதியாக இடம்பெறும்.

இவாங்கா டிரம்புக்கு சமந்தா அளிக்கப்போகும் நினைவு பரிசு

டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் ஒருநாள் இந்திய பயணமாக இன்று வருகை தந்துள்ளார். இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் நடைபெறும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்தது தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் தான் தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையமே உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்துள்ளது