LGBTQIA+ பற்றிய விளக்கம் தெரியுமா? ஜுன்- Pride Month இல் தெரிந்து கொள்வோம்…
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலினம் (Sexual) மற்றும் உடல் ரீதியான பாலின ஈர்ப்பு (Sexual orientation) குறித்த விஷயங்களில் எப்போதுமே நமக்கு ஒரு குழப்பம் இருந்து வருகிறது. காரணம் சாதாரணமாக ஆண், பெண் என்று இருபாலினங்கள் மட்டுமே இருந்த நிலையில் மூன்றவாகதாக Transgender என்ற வார்த்தை அதிகமாக உலக அளவில் புழங்கப்பட்டது.
இதோடு இருந்தால் பரவாயில்லை LGBT என்றார்கள். இதையும் தாண்டி தற்போது LGBTQIA+ என்று அடுக்கிக்கொண்டே செல்கின்றனர். உண்மையில் இவை அனைத்துமே பாலினத்தை மட்டும் குறிக்கும் சொற்களா? அல்லது உடல் ரீதியான பாலின ஈர்ப்பு பற்றியதா என்ற குழப்பம் இருந்து கொண்டே வருகிறது.
சாதாரணமாக ஒரு ஆணோ, பெண்ணோ தங்களது எதிர்பாலினத்தவரை உடல் ரீதியாக ஈர்க்கப்படுவதற்கு Romatic and heterosexual எதிர்பாலீன ஈர்ப்பு என்கிறோம்.
இதைத்தாண்டி Lesbian, Gay, Bisexual, Transgender (Transman, Transwomen), Intersex, Asexuals, questioning (Queer) என்று பல வகைகள் இருக்கிறது. இதில் Transgender என்பது பாலின மாற்றத்தை மட்டுமே குறிக்கும் வார்த்தை. இந்தப் பயன்பாடு உடல் ரீதியான பாலின ஈர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Lesbian ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புவது மற்றும் அவர்களுடன் உடல்ரீதியாக உறவு வைத்துக்கொள்வது
Gay ஒரு ஆண் மற்றொரு ஆணை விரும்பி அவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வது
Bisexual ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தங்களுடைய எதிர்பாலினத்தவரை மட்டும் அல்லாமல் ஆண், பெண் என இரண்டு பாலினத்தவர் மீதும் உடல் ரீதியாக ஈர்க்கப்படுவது.
Transgender இது உடலுறவு ரீதியானது அல்ல. பிறப்பால் ஒரு பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ தங்களை உணர்ந்தவர்கள் திடீரென்று மற்றொரு பாலினத்தவர்களாக உணர்ந்து தங்களது உறுப்பு மற்றும் உடை அமைப்பை மாற்றிக்கொள்வது.
அதிலும் ஒரு பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களை Transman என்றும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களை Transwomen என்றும் கூறுகிறோம். இப்படி மாறியவர்கள் யாருடன் உடல் ரீதியாக ஈர்க்கப்படுகிறார்கள் என்றால் எதிர்பாலினத்தை ஈர்க்கும் heterosexual, இன்னொரு Transgender, பாலினமே அறிய முடியாமல் இருக்கும் Inter sex, Bisexual இப்படி யார் மீதும் இவர்களுக்கு காதல் ஏற்பட்டு அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள முடியும்.
Intersex தீர்மானமா சொல்ல முடியாத நிலையைத்தான் இப்படி கூறுகின்றனர். காரணம் ஒரு நபர் தோற்றத்தில் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் மருத்துவ ரீதியாக உறுப்புகளில் மாற்றம் ஏற்படுவது. இம்மாதிரியான சந்தேகத்தில் அந்த நபர் தன்னை ஆணா, பெண்ணா என்று அறிய முடியாமல் குழப்பத்தில் இருக்கலாம்.
Intersex –ஐ மருத்துவர்கள் பன்முக பால் பண்பு கொண்டவர்கள் (Sexual characteristics) என்றே அழைக்கின்றனர். அதாவது chromosomes மாற்றத்தால் உடலிலுள்ள பாலினம் சார்ந்த உறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும். இதனால் அவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது Transgender ஆகவோ தன்னை உணரால். இந்த மாதிரியான நபர்கள் Transgender, Bisexual, சாதாரணமாக எதிர்பாலின ஈர்ப்பு உடையர்வர்கள் இப்படி யார் கூட வேண்டுமானாலும் ஈர்ப்பு ஏற்பட்டு உறவு வைத்துக் கொள்ள முடியும்.
Asexuals- பாலீன ஈர்ப்பு அற்றவர்கள். அதற்காக பிரம்மச்சாரிகள் எல்லாம் Asexuals என்று சொல்ல முடியாது. காரணம் பிரம்மச்சாரிகளுக்கு செக்ஸ் உணர்வு இருக்கும். ஆனால் அவர்கள் அதை செயற்கையாக அடக்குகின்றனர். Asexuals- நபர்களுக்கு மற்றவர்கள் மீது Romantic attraction இருக்கும் (விருப்பம் இருக்கும்), ஆனால் உடலுறவு ரீதியான Sexual attraction (செக்ஸ் உணர்வு இருக்காது) இல்லாத தன்மையே மிகுந்து காணப்படும்.
Questioning (Queer) தனது பாலீர்ப்பு அடையாளத்தை தீர்மானமாக இதுதான் என்று வெளியுலகில் சொல்வதற்காக போராடுபவர்களை Queer என்கின்றனர். உண்மையில் இது உடல் ஈர்ப்பு பற்றிய வார்த்தையோ அல்லது பாலினம் சார்ந்த வார்த்தையோ அல்ல. பாலியல் ரீதியாக தங்களது அடையாளத்திற்காகப் போராடி வரும் ஒட்டுமொத்த LGBT சமூக மக்களும் தங்களை Queer என்று சொல்லிக்கொண்டு தங்களது அடையாளத்திற்காக போராடுகின்றனர்.
உண்மையில் பாலினத் தேர்வு என்பது தனிமனித சுதந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பாலின ஈர்ப்பிலும் சரி, பாலினத்திலும் சரி அதிகளவிலான குழப்பங்களும் பாதுகாப்பற்ற தன்மையும் இன்றைய சூழலில் காணப்படுகிறது.
இதுபோன்ற பாதுகாப்பற்ற தன்மையை விடுத்து சட்டப்பூர்வமான பாதுகாப்பு நிலைமைக்காக பல்வேறு குழுக்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. அந்த வகையில் 1969 ஜுன் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் ஆரம்பித்த போராட்டம் இன்று உலகம் முழுக்கவே ஒலித்துவருகிறது.
இந்தியாவிலும் சட்டப்பூர்வமான பாதுகாப்பை முன்னிறுத்தி பிரைட் மாதம் கொண்டாடப்படுகிறது. அதில் ‘அனைத்துக் காதலும் காதலே, ‘நாம் தனியாக இல்லை‘ என்று வண்ணமயமான எழுத்துகளில் போஸ்டர்களை ஏந்தி LGBTQIA+ மக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments