ஒருபால் திருமணத்தில் பாரம்பரியமும் வேணும்… புரட்சியில் மலர்ந்த கதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதைத்தான் இந்த உலகம் இன்றைக்கும் விரும்பி வருகிறது. இதற்கு மாறாக நடக்கும் திருமணங்களுக்கு சில நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்பட்டாலும் அதை அங்குள்ள மதங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் அங்கீகரிக்கின்றனவா? என்பதுதான் இங்கு கேள்வியே.
இப்படியொரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட அமெரிக்காவை சேர்ந்த சில ஒருபாலின ஜோடிகள் தங்கள் திருமணத்தில் எப்படியாவது பாரம்பரியம் இடம்பெற வேண்டும் என நினைத்து அல்லாடி வருகின்றனர். இதற்காக புரோகிதர்களை தொடர்பு கொண்டு பேசும் சில ஜோடிகளுக்கு ஏச்சும் ஏமாற்றமும்தான் மிஞ்சுகிறது.
இப்படி புரோகிதர்களை தேடி அலைந்த சமீர் சமுதாரா மற்றும் அமதி கோகலே எனும் ஜோடி தற்போது ஊடகத்திடம் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதாவது அமெரிக்காவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படும் ஒருபாலின விரும்பிகளுக்காக தனிப்பட்ட முறையில் புது திருமணச் சட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம் ஒரு பெண்.
சப்னா பாண்ட்யா எனும் இந்து பெண் ஒருவர் முஸ்லீம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைத்து இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க எந்த புரோகிதரும் முன்வரவில்லை. அதேபோல முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்துகொள்ள மதகுருமார்களை அணுகவே இவர்களுக்கு பயம். அதனால் சப்னா ஒருவழியாக இந்து மந்திரங்களையும் சில குரான் வரிகளையும் இணைத்து திருமணத்திற்கு ஏற்ற புது சட்டத்தை உருவாக்கி விட்டார்.
இதில் நன்கு தேர்ச்சிப் பெற்ற சப்னா தற்போது தன்னார்வ தொண்டுநிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டு தங்களை நாடிவரும் பல நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு அவர்களது இந்து பாரம்பரியம் மற்றும் விரும்புகிற பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்துவருகிறார். இவர்களை முயற்சிக்கு சமூகநல ஆர்வலர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com