போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

இன்று ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பேசியதாவது:

என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள். என்னை நன்றாக வாழ வைத்த நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஆனால் ஒருசிலர் கேட்கின்றனர், தமிழர்களை காப்பாற்ற இங்கு தலைவர்கள் இருக்கின்றனர், நீங்கள் தேவையில்லை என்று. இருக்கின்றார்கள் நான் இல்லை என்று கூறவில்லை. ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி, அவருக்கு மட்டும் சுதந்திரம் கொடுத்தால் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று சோ அவர்கள் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் நல்ல படிப்பாளி, உலகம் முழுவதும் சுற்றிய முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர், தலித்துக்காக போராடி வரும் திருமாவளவன் அவர்களும் ஒரு திறமைசாலிதான். சீமான், ஒரு நல்ல போராளி, அவர் தெரிவித்த ஒருசில கருத்துக்களை கேட்டு பிரமித்து போயுள்ளேன்; ஆனால் சிஸ்டம் கெட்டு போய் உள்ளது, ஜனநாயகமே கெட்டு போயுள்ளது. எனவே சிஸ்டத்தை மாற்றம் செய்ய வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்

எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், நமக்கு கிடைக்கும் திட்டுக்கள், விமர்சனங்கள் அனைத்துமே நமக்கு உரம் மாதிரி. நம்மை எதிர்ப்பவர்கள் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு ராஜாவிடம் போர்ப்படைகள் என்று ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருப்பார்கள். ஆனால் போர் என்று வந்துவிட்டால் நாட்டில் உள்ள ஆண்மகன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டிற்காக போராடுவார்கள், அதுவரை அவர்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்துவருவார்கள். அதேபோல் எனக்கும் சில கடமைகள் உள்ளன, உங்களுக்கும் கடமைகள் உள்ளன, நாம் நம்முடைய கடமைகளை பார்போம், போர் என்று வரும்போது களத்தில் இறங்குவோம்' என்று ரஜினிகாந்த் கூறினார்.

More News

நான் பச்சை தமிழன். என்னை தூக்கி போட்டால் இமயமலையில் தான் விழுவேன்! ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கின்றார்...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்...

விஷாலின் அட்வான்ஸ் ஐடியாவுக்கு மாஸ் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா?

நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடன், முழு ஈடுபாடுடன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் விஷாலுக்கு அவ்வப்போது திரைத்துறையிலேயே மறைமுகமாக பல்வேறு இடைஞ்சல்கள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

நயன்தாரா'வின் 'இமைக்கா நொடிகள்' டீசர் விமர்சனம்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், அந்த பட்டியலில் இணையும் இன்னொரு திரைப்படம் தான் இந்த 'இமைக்கா நொடிகள்'

கேன்ஸ் படவிழாவில் 'சங்கமித்ரா'வின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படம், 'பாகுபலி' படத்தை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சரித்திர படம் என்பது குறிப்பிடத்தக்கது