விவேக் கனவை நினைவாக்குவோம்...! கோவையில் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிப்பு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
விவேக் அவர்களின் கனவை நனவாக்குவோம் என்று, கோவை திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் விவேக் அவர்களின் "1 கோடி மரங்களை நடவேண்டும்" என்ற கனவை திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக நிறைவேற்றுவோம் என, அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"100-க்கும் அதிகமான படங்களில் நடித்து, நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். குணசித்திர நடிகரான விவேக் அவர்களின் இறப்பு நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. அறிவியலுக்கு புறம்பான கருத்துக்கள், மூடப்பழக்க வழக்கங்கள் குறித்தும் திரைப்படங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் தான் விவேக் . இதனால் தான் மறைந்த தலைவர் மு.கருணாநிதி இவரை "சின்னக்கலைவாணர்" என அன்போடு அழைப்பார்.
விவேக் அவர்கள் நடிகர் என்பதையும் தாண்டி, படத்தில் கூறிய கருத்துக்களை நடைமுறையிலும் கொண்டு வந்தார். சுற்றுச்சுழல் மீது உள்ள ஆர்வத்தாலும், கலாம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த "1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும்" என்பதை லட்சியமாக வைத்திருந்தார். அந்த வகையில் சிறப்பாக 37 லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டியுள்ளார். லட்சியம் நடப்பதற்குள், அவர் காலமாகி விட்டதால், அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவதே விவேக்கிற்கு நாம் செய்யும் கைமாறாக இருக்கும்.
இதனால் விவேக் அவர்கள் விட்டுச்சென்ற பணியை திமுகவின், சுற்றுச்சூழல் அணி முன்னெடுத்து பணிகளை செய்ய உள்ளது. இந்த நேரத்தில் அவருடன் பயணித்த சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்தாலோசிக்க உள்ளோம். இந்த பணியை நாங்கள் தொடர்ந்து செய்ய மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com