விவேக் கனவை நினைவாக்குவோம்...! கோவையில் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிப்பு...!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

விவேக் அவர்களின் கனவை நனவாக்குவோம் என்று, கோவை திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் 1 கோடி மரங்களை நடவேண்டும் என்ற கனவை திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக நிறைவேற்றுவோம் என, அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

100-க்கும் அதிகமான படங்களில் நடித்து, நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். குணசித்திர நடிகரான விவேக் அவர்களின் இறப்பு நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. அறிவியலுக்கு புறம்பான கருத்துக்கள், மூடப்பழக்க வழக்கங்கள் குறித்தும் திரைப்படங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் தான் விவேக் . இதனால் தான் மறைந்த தலைவர் மு.கருணாநிதி இவரை சின்னக்கலைவாணர் என அன்போடு அழைப்பார்.

விவேக் அவர்கள் நடிகர் என்பதையும் தாண்டி, படத்தில் கூறிய கருத்துக்களை நடைமுறையிலும் கொண்டு வந்தார். சுற்றுச்சுழல் மீது உள்ள ஆர்வத்தாலும், கலாம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்தார். அந்த வகையில் சிறப்பாக 37 லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டியுள்ளார். லட்சியம் நடப்பதற்குள், அவர் காலமாகி விட்டதால், அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவதே விவேக்கிற்கு நாம் செய்யும் கைமாறாக இருக்கும்.

இதனால் விவேக் அவர்கள் விட்டுச்சென்ற பணியை திமுகவின், சுற்றுச்சூழல் அணி முன்னெடுத்து பணிகளை செய்ய உள்ளது. இந்த நேரத்தில் அவருடன் பயணித்த சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்தாலோசிக்க உள்ளோம். இந்த பணியை நாங்கள் தொடர்ந்து செய்ய மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

More News

ஃபேஸியலால் முகவீக்கம்: ரைசாவின் டாக்டர் அளித்த விளக்கம்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் சமீபத்தில் ஃபேஸியல் செய்யப் போனபோது அவருக்கு தோல் மருத்துவர் வேறுசில விஷயங்களை செய்ததாகவும்

'இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கே': கேப்ரில்லாவை கேலி செய்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் ஒருவரான கேப்ரில்லா அணிந்த ஜீன்ஸ் ஒன்றுக்கு 'ரொம்ப கிழிஞ்சி இருக்கே' என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கேலி செய்து கமெண்ட் பதிவு செய்து இருப்பது

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியது ஏன்? கமீலா நாசர் விளக்கம்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக இன்று காலை நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிவித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்

தமிழ் திரையுலகின் இளம் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: மூச்சுத்திணறல் என டுவிட்டரில் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் இளம் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த பாதிப்பில் இருந்து தான் மீண்டு வருவேன் என சமூக வலைதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா?

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது