இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள். புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே. ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஒரு வாரமாக அறவழியில், அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வன்முறை பக்கம் திரும்பிவிட்டது. மாணவர்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் நுழைந்ததே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் உள்பட பொதுமக்கள் பலர் கூறி வருகின்றனர். உண்மையில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது, ஆனால் இதை மாணவர்களுக்கு புரிய வைப்பதற்குள் இந்த வன்முறை நிகழ்ந்துவிட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடல்நிலையையும் கருதாமல் இந்த போராட்டத்தை நிறுத்த பெரும் முயற்சி செய்து வருகிறார். இவர் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:
'தற்போது தமிழக பொறுப்பு ஆளுனர் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது என்று மீடியாவிடம் கூறிக்கொண்டு இருக்கின்றார். எனவே நமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது. உண்மையாகவே வெற்றி கிடைத்துவிட்டது. ஏன் இதை யாரும் புரியாமல் உள்ளீர்கள். நான் தற்போது மெரீனாவுக்கு வந்து கொண்டிருக்கின்றேன். இந்த நாள் நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள்.
நாம் இதுவரை கஷ்டப்பட்டு போராடிய இடத்தில் ஆடிப்பாடி கொண்டாட வேண்டிய நாள் இன்று. அதனால் கடல் அருகே செல்வது, சாலையில் உட்காருவது ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம்,. இன்று இரவு நாம் அனைவரும் இந்த வெற்றியை கொண்டாடுவோம். எனவே தயவுசெய்து மாணவர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Let us all be silent and celebrate pic.twitter.com/FFLkvNGESb
— Raghava Lawrence (@offl_Lawrence) January 23, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout