அமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா? அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு!
- IndiaGlitz, [Monday,December 02 2019]
உலகில் உற்பத்தியாகும் 30 சதவீத ஆக்ஸிஜன், அமேசான் காட்டில் தான் உற்பத்தி ஆவதாக ஒரு செய்தி வெளியாகிய நிலையில் அந்த அமேசான் காடுகளில் உள்ள மரங்களை அழிக்கும் நோக்கில் ஒரு சில சமூக விரோதிகள் செயல்பட்டு, தீ வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அமேசான் காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ, மாதக் கணக்கில் எரிந்து லட்சக்கணக்கான மரங்களை சாம்பலாக்கியது. இந்த நிலையில் அமேசான் காட்டின் தீ விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாகவும் அந்த சதிக்கு டைட்டானிக் நடிகர் லியானார்டோ உடந்தை என்றும், பிரேசில் அதிபர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதிபர் இந்த குற்றச்சாட்டுக்க்கு ஆதாரம் எதையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபரின் இந்த குற்றச்சாட்டுக்கு டைட்டானிக் நடிகர் லியானார்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அமேசான் காட்டில் தீ வைக்க தொண்டு அமைப்பின் மூலம் நான் தான் சதி செய்ததாக அதிபர் கூறியுள்ளது முற்றிலும் தவறான தகவல் என்றும், சுற்றுச்சூழலின் எதிர்காலம் குறித்து நான் என்றும் அக்கறை உள்ளவன் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க என்றும் நான் உடன் இருப்பேன் என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் இதுபோன்ற தவறை நான் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இவர் அமேசான் காட்டில் எரிந்த தீ குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்தை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on Nov 30, 2019 at 7:48am PST