அந்நியன் அம்பி கேரக்டரில் ஆஸ்கார் விருது நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,March 22 2016]

அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்களில் நமது சீயான் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது மொத்தம் 24 கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டரில் ஆஸ்கார் வின்னர் லியனார்டோ டி காப்ரியோ நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


அமெரிக்காவையே கடந்த 1970களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பில்லி மில்லிகன் (Billy Milligan) என்பவர். இவர் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றங்கள் அனைத்திற்கும் காரணம் தன்னுள் இருக்கும் 24 மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்கள்தான் என நீதிமன்றத்தில் வாதாடியவர்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்திய 'தி மைன்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன்' என்ற நாவல் எழுதப்பட்டது. இந்த நாவல்தான் தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் பில்லி மில்லிகன் வேடத்தில் நடிக்கவுள்ளார் லியனார்டோ டி காப்ரியோ. இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது அவரது இருபது வருட கனவாம். அனேகமாக லியனார்டோ டி காப்ரியோ அவர்களுக்கு இன்னொரு ஆஸ்கார் விருது காத்திருக்கின்றது என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

More News

'2.0' எமிஜாக்சன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கின்றது...

விமான பைலட் ஆகிறார் கார்த்தி

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமாகி தற்போது நடிகர் சங்க பொருளாளராக இருக்கும் கார்த்தி, விரைவில் விமானம் ஓட்டும் பைலட் ஆக மாறவிருக்கின்றார்....

நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த விஜய்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...

முதன்முதலாக கே.வி.ஆனந்துடன் இணையும் இரண்டு பிரபலங்கள்

கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 'வை ராஜா வை', மற்றும் ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' என ஹாட்ரிக் வெற்றி ....

ரஜினிக்கு டுவிட்டர் வழங்கிய சிறப்பு அந்தஸ்து

சமூக இணையதளங்களில் ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள டுவிட்டர் ஆரம்பமாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது....