அந்நியன் அம்பி கேரக்டரில் ஆஸ்கார் விருது நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்களில் நமது சீயான் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது மொத்தம் 24 கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டரில் ஆஸ்கார் வின்னர் லியனார்டோ டி காப்ரியோ நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவையே கடந்த 1970களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பில்லி மில்லிகன் (Billy Milligan) என்பவர். இவர் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றங்கள் அனைத்திற்கும் காரணம் தன்னுள் இருக்கும் 24 மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்கள்தான் என நீதிமன்றத்தில் வாதாடியவர்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்திய 'தி மைன்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன்' என்ற நாவல் எழுதப்பட்டது. இந்த நாவல்தான் தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் பில்லி மில்லிகன் வேடத்தில் நடிக்கவுள்ளார் லியனார்டோ டி காப்ரியோ. இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது அவரது இருபது வருட கனவாம். அனேகமாக லியனார்டோ டி காப்ரியோ அவர்களுக்கு இன்னொரு ஆஸ்கார் விருது காத்திருக்கின்றது என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com