டைட்டானிக் புகழ் நடிகருடன் டேட்டிங் செய்யும் இந்திய மாடல்… படு சுவாரசியமான தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரமாக வலம்வரும் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் பாஞ்சாபி மாடல் ஒருவர் டேட்டிங் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலை அடுத்து ரசிகர்கள் பல்வேறு சுவாரசியமான கேள்விகளை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ‘டைட்டானிக் திரைப்படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருகிறார். 58 வயதான இவர் தற்போது 28 வயது பிரிட்டிஷ் – இந்திய மாடலான நீலம் கில் என்பவருடன் டேட்டிங் செய்துவருவதாக வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. காரணம் இவர்கள் இருவரும் இணைந்து லண்டனில் உள்ள சில்டர்ன் ஃபயர்ஹவுஸ் எனும் இடத்தில் ஒன்றாக உணவருந்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்தச் சந்திப்பின்போது டிகாப்ரியோவின் அம்மா இர்மெலின் இண்டன்பிர்கென் மற்றும் இன்னும் சில நண்பர்கள் உடன் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பை தவிர நீலம் கில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போது டிகாப்ரியோவும் அந்த விழாவிற்கு தன்னுடைய ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர்ஸ்‘ திரைப்படத்தை காட்சிப்படுத்துவதற்காக வந்திருந்தார். அப்போதும் டிகாப்ரியோ மற்றும் நீலம் கில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகியது.
இதையடுத்து டிகாப்ரியோ மற்றும் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நீலம் கில் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என்பதுபோன்ற வதந்தி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் பிறந்தவரான நீலம் கில் சிறந்த மாடலாகவும் பல பிரபல பிராண்ட் நிறுவனங்களுக்கு அம்பாசிட்டராகவும் அறியப்பட்டு வருகிறார்.
ஆனால் அவருடைய தாத்தா- பாட்டி இருவரும் பஞ்சாபி மாநிலத்தில் வசித்தவர்கள் என்பதும் 14 வயதிலேயே நீலம் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிகாப்ரியோ மற்றும் நீலம் கில் டேட்டிங் செய்தி இந்தியா முழுக்கவே பேசுபொருளாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments